பீகாரில் தொழிற்சாலையில் கியாஸ் கசிந்து விபத்து- ஒருவர் பலி!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற ஓடினர். இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர். கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு காற்றில் நான்கு கிலோமீட்டர் வரை பரவியது.
அதை சுவாசித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கியாஸ் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது.