மருந்துகளின் விலை இன்று முதல் குறைப்பு!!
60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16 வீதம் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.