;
Athirady Tamil News

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நாளை தொடக்கம்!!

0

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை, உற்சவங்களில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்கான பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதற்காக, இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது. 30-ந்தேதி உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலசபூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ரா சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது.

2-ந்தேதி காலை மகா பூர்ணாஹுதி, கலசோத்வாசனம், பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மூலவர்களுக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரருக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.