பறக்கும் மனிதனைக் கொண்டு பீட்சா விநியோகம் – டோமினோஸ் புதிய முயற்சி !!
இன்று பீட்சா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புது புது முயற்சியில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை வழங்க முயன்று வருகின்றது.
அந்தவகையில், பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம் மூலமாக பீட்சா விநியோகம் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது.
இச்சேவையை டோமினோஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
jetpack எனும் பறக்கும் இயந்திரத்தை மனிதன் அணிந்து கொள்ளுவதன் மூலமாக பீட்சா விநியோகம் செய்யப்படுகின்றது.
பறக்கும் இயந்திரம்
அந்தவகையில், ஜெட் சூட் நிறுவனமான கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸுடன்(gravity industries) உடன் சேர்ந்து டோமினோஸ் இந்த சேவையை வழங்குகிறது.
பிரித்தானியா பில்டன் கிளாஸ்டன்பரி திருவிழாவை கொண்டாடும் மக்களுக்கு பறக்கும் இயந்திரம்(jetpack) அணிந்த மனிதன் மூலம் டோமினோஸ் நிறுவனம் பீட்சா விநியோகம் செய்துவருகின்றது.
இதன்படி பறக்கும் இயந்திரத்தை அணிந்த குறித்த ஊழியர் கடையில் வந்து பீட்சாவை பெற்றுக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு செல்கிறார்.
இவர் விளைநிலங்களுக்கும், புல்வெளிகளுக்கும் மேல் அந்தரத்தில் பறந்து சென்று பாதுகாப்பாக பீட்சாவை விநியோகம் செய்கிறார்.
தற்போது பீட்சா விநியோகம் செய்யும் சேவையை டோமினோஸ் நிறுவனம் மேலும் விரைவுபடுத்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.