சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பொலிஸாருக்கு கருத்தரங்கு!! (PHOTOS)
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் செயற்பட்டார்.
இக்கலந்துரையாடலில் சித்திரவதையிருந்து பாதுகாப்பு என்னும் தலைப்பில் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பிலும், சித்திரவதைக்கு எதிரான தண்டனைகள் தொடர்பிலும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வகிபாகம் என்பன கலந்துரையாடப்பட்டன.