“கூத்தரசன் “ சவிரிமுத்து மிக்கேல்தாஸின் குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் நூல் வெளியீட்டு நிகழ்வு!! (PHOTOS)
கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களின் ‘குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (28) நடைபெற்றது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒரு தேசிய இனத்தின் மரபு சார்ந்த கலையைப் பேணியமைக்காக சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களுக்கு ‘ கூத்தரசன்‘ எனும் பட்டமளித்து வரலாற்றுப் பதிவாக்கிய பெருமை பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்களையே சாரும்.
மேலும் இந்த நிகழ்வின் நூல் முதற் பிரதியினை தொழிலதிபர் செ. அமலதாசன் பெற்றுக்கொண்டதோடு ,நூல் வெளியீட்டின் சிறப்புரையை விரிவுரையாளர் இளம்பிறை வழங்கியிருந்தார்.
மேலும் மெலிஞ்சிமுனை மற்றும் நாவாந்துறை பெருமக்கள், மதிப்புக்குரிய பேராசிரியர்கள் கல்விமான்கள் அருட் தந்தையர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.