;
Athirady Tamil News

திருவண்ணாமலையில் நாளை குரு பூர்ணிமா – பவுர்ணமி கிரிவலம்: வேலூர்-விழுப்புரத்துக்கு ரெயில் இயக்கம்!!

0

ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை போன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி என்பது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குவதால், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கணித்துள்ளனர்.

இதையொட்டி, அருணாசலேஸ்வரர் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி தெற்கு ரெயில்வே துறை சார்பில் சென்னை கடற்கரை-வேலூர் மெமு ரெயில், தாம்பரம்-விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.