மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள ரஷ்யா – கொல்லப்பட்ட உக்ரைன் தளபதிகள் !!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 உக்ரைன் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வாக்னர் குழுவின் கிளர்ச்சியை முடிவுக்குக்கொண்டு வந்துள்ள ரஷ்யா, தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
உக்ரைனின் டோர்ஸ்க் மாகாணத்தின் வடக்கே உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் உள்ள உணவக மற்றும் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 2 உக்ரைன் தளபதிகள் உட்பட சுமார் 50 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதலில் 12 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், தாக்குதல் நடத்தப்பட்ட இடம் குறித்தான புகைப்படங்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய குற்றத்தில் உள்ளூர் வாசி ஒருவரை உக்ரைன் கைது செய்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவிற்காக உளவு பார்ப்பவர்களுக்கு ராஜதுரோக குற்றமாக கருதப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.