ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது: பிரதமர் மோடி!!
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது இந்தியா ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- ஒருபுறம் ஆன்மிக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன, அதே நேரத்தில் இந்தியா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணி பெற்று வருகிறது. பொருளாதாரத்தில் இந்தியா இன்று உலகளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. மொத்த ஆன்லைன் வர்த்தகத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத குறுகியகால வளர்ச்சியில் (startup ecosystem) இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது” என்றார். மேலும், நான் பலமுறை புட்டபர்த்தி வந்துள்ளேன். இந்த முறை என்னால் வரமுடியவில்லை. ஆசிர்வாதம் வழங்க வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆசிர்வாதம் வாங்க வருவேன், ஆனால் வழங்க மாட்டேன்” என்றார்.