;
Athirady Tamil News

24 ஆண்டுகளில் 20 ஆண்டுகளை விடுமுறையில் கழித்த ஆசிரியர் – நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு !!

0

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பள்ளிக்கு வந்துள்ளார்.மிகுதியான 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லை, கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார்.

இந்த ஆசிரியரின் பெயர் சின்சோ பூலியானா தி லியோ. மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் இவர் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது இந்த ஆசிரியருக்கு 56 வயதாகிறது. இதில், 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றன.

வெனீஸ் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். எப்போதுமே மிக நீண்ட காலத்துக்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர்.

சிலர் இப்படி ஒரு ஆசிரியர் இருப்பதையே மறந்து விடுவார்களாம். அண்மையில் ஒருமுறை பாடசாலைக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார். அப்போதும் கூட தொலைபேசியில் தகவல் அளித்தபடியே இருந்துள்ளார்.

இத்தனைக்கும், தற்போதைய பாடத்திட்டம் என்னவென்றே தெரியாமல், சரியான புத்தகம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் இவர் மீது விழுந்தது.

சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன என்று பாடசாலையின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால் கடந்த ஜூன் 22ஆம் திகதி இறுதியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு வரவே இல்லை என்பது தெரிய வந்ததும் நீதிமன்றம் இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.