;
Athirady Tamil News

நயினாதீவு விகாராதிபதிக்கு கௌரவிப்பு!! (PHOTOS)

0

நயினாதீவு ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கான கௌரவிப்பு விழா முன்னெடுக்கப்பட்டது.

நயினாதீவு மணிமேகலை அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 09 மணியளவில் கௌரவிப்பு விழா இடம்பெற்றது.

விகாரையில் இடம்பெற்ற பூஜைகளுடன் , விழா நாயகனான விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ தவில் நாதஸ்வர இசையுடனும், கண்டிய நடனத்துடனும் மண்டபத்திற்கு செங்காவி விரிப்பில் அழைத்து செல்லப்பட்டார்.

அதன் போது வீதியில் இரு மருங்கிலும் மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கூடி, விகாரதிபதிக்கு மலர் தூபி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை நிகழ்வில் இந்து மற்றும் முஸ்லீம் மதகுருமார்களும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.