கொள்கை வட்டி வீதம் குறைப்பு!!
வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR) மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதம்(Standing Lending Facility Rate – SLFR) 200 அடிப்படை அலகுகளால் அதாவது 2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்திற்கான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இலங்கை மத்திய வங்கி இன்று(06) காலை அறிவித்தது.
பணவீக்கத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை வட்டி வீதங்களை உயர் பெறுமதியில் பேணியது.
இன்று(06) வௌியிடப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், வங்கிகளுக்கு கடன் வழங்கும் போது மத்திய வங்கியால் அறவிடப்படும் வழமையான கடன் வசதி வீதம் 14 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி தம்மிடம் வைப்பிலிடும் வணிக வங்கிகளுக்கு செலுத்தும் வட்டி வீதத்தை 13 வீதத்திலிருந்து 11 வீதமாக குறைத்துள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் நாட்களில் சந்தை வட்டி வீதங்களும் குறைவடையவுள்ளன.
பணவீக்கம் எதிர்பார்த்த அளவை விட குறைவடைந்துள்ளதை கருத்திற்கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.