உக்ரைனில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் !!
உக்ரைனின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லிவிவ் நகரத்தில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிய பொதுமக்களின் மீதான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதலில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக Ihor Klymenko குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யப் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உறுதியான பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளாார்.
இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய இராணுவம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இந்த தாக்குதலுக்கு இலக்கான கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்கான கட்டடம் மற்றும் சிதைவடைந்த வாகனங்களின் காணொளிகளை நகர மேயர் Andriy Sadovyi வெளியிட்டுள்ளார்.
சுமார் 60 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பல கட்டடங்களின் கூரைகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மற்றும் பல்கலைகழக விடுதி ஆகியனவும் ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.