தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்க தவறிவிட்டது- சரத் பவார்; செயற்குழு கூட்டம் ஏற்கக்கூடியது அல்ல- அஜித் பவார்!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று டெல்லியில் சரத்குமார் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது 82 வயது ஆனாலும் 93 வயதானாலும் தான் உத்வேகத்துடன் இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே அஜித் பவார், பதவியேற்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னதாகவே தேசிய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்து கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய சரத் பவார், இந்திய தேர்தல் ஆணையம் தங்களுக்கு தகவல் தெரிவிக்க தவறிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார். இதனால் தேர்தல் கமிஷன் சரத்பவாருக்கு தகவல் தெரிவிக்கும் என தெரிகிறது.
அதேவேளையில் அஜித் பவார், சட்டப்பூர்வமாக இந்த செயற்குழு கூட்டியது சரியல்ல எனது விமர்சனம் செய்துள்ளார். கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் விவாதம் உள்ளபோது, அதன் பிரத்யேக வரம்பிற்குள் யாருக்கும் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். அஜித் பவார் தலைமையிலான கூட்டணி தேசிவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில 40 கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.எல்.ஏ.-க்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்னர். மூன்றில் இரண்டு பகுதியான 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அஜித் பவாருக்கு தேவை. இதுவரை அஜித் பவாருக்கு 32 எம்.எல்.ஏ.க்களும், சரத் பவாருக்கு 14 எம்.எல்.ஏ.-க்களும் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.