வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடும் எச்சரிக்கை!!
மத்திய வங்கியின் நாணயசபை, நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை குறைத்துள்ளது.
அதற்கு அமைவாக வட்டிவீதங்களை குறைக்கத் தவறும் வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
துணைநில் வைப்பு வட்டி வீதம் மற்றும் துணைநில் கடன் வட்டிவீதம் என்பன கடந்த இரண்டு மாதங்களாக 4.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி தற்போது இந்த வட்டிவீதங்கள் முறையே 11 மற்றும் 12 சதவீதமாக நிலவுகின்ற நிலையில், அதற்கு ஏற்ப வங்கிகள் தங்களது வட்டிவீதங்களையும் சீராக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.