;
Athirady Tamil News

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையினால் கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்!! (PHOTOS)

0

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையின் நிதிப் பங்களிப்பில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 மாணவர்களுக்கு காசோலைகள் நேற்று வழங்கப்பட்டன.

ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியது. நேற்று முன்தினம்(06) வைரவர் சாந்தி உற்சவத்தினை முன்னிட்டு 100 மாணவர்களுக்கு தலா 4000 மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஆலய குருக்களான சிவதர்சக்குருக்கள், ஹரிதர்சக்குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

சைவ ஆலயங்கள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதில்லை என தற்காலத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் இவ்வாறு மாணவர்களுக்கு கற்றல் மேம்படுத்தல் நலத் திட்டங்கள் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில் ஆலய தொண்டர் சபையினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.