கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் தனித்துவமான எடுத்துக்காட்டு- பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி முதலில் சத்தீஸ்கர் மாநிலம் சென்ற அவர், ராய்ப்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் முடிவடைந்த திட்டங்களை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அங்கிருந்து கோரக்புர் விரைந்த பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றி பிரதமர் மோடி தனது கோரப்பூர் பயணம் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தனது கோரக்பூர் பயணம் கீதா பதிப்பகம் நிறைவு விழாவில் கலந்துக் கொண்டது, நவீன ரெயில்களை அறிமுகப்படுத்தியது, பாரம்பரியத்துடன் வளர்ச்சியை இணைக்கும் தனது அரசாங்கத்தின் கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. இந்த முறை கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் மேம்பாடு கொள்கைக்கு ஒரு தனித்துவமான உதாரணம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கனவு நிறைவேறப் போகிறது. மராட்டிய ஆட்சியாளர் சிவாஜியின் கொடியின் அடிப்படையில் கடற்படை சின்னங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. கல்யாண் பத்திரிக்கைக்கு விளம்பரம் எடுக்க வேண்டாம் என்று கீதா பத்திரிகைக்கு மகாத்மா காந்தி அறிவுறுத்தியிருந்தார்.
அது இன்னும் அந்த ஆலோசனையை பின்பற்றுகிறது. ரெயிலின் மீது ஒரு மோகம் உள்ளது. முன்பு, தலைவர்கள் தங்கள் பகுதிகளில் ரெயில்களை நிறுத்துவது பற்றி எழுதினர். இப்போது, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்தே பாரத் ரெயில்களை இயக்கக் கோரி எனக்கு கடிதங்கள் வருகின்றன. வந்தே பாரத் நடுத்தர மக்களுக்கு வசதிகள் மற்றும் வசதிகளை வழங்கியுள்ளது. கீதா பிரஸ் என்பது உலகின் ஒரே அச்சகம். அது ஒரு அமைப்பு அல்ல. வாழும் நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.