டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வானிலை மையத்தில் மதியம் 2.30 மணி வரை 98.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் மையத்தில் 111.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் டெல்லி மற்றும் என்சிஆர், யமுனா நகர், குருக்ஷேத்ரா, கர்னால், அசாந்த், பானிபட், கோஹானா, கன்னார், மெஹம், சோனிபட், ரோஹ்தக், கார்கோடா, பிவானி, சர்க்கி தாத்ரி, மட்டன்ஹைல், ஜஜ்ஜார், கோஸ்ஸாவின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.