நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################
நெடுந்தீவைச் சேர்ந்தவரும், பெரியதம்பனையில் ஆரம்பத்தில் வாழ்ந்து, இறுதியாக வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களது பத்தாம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சார்பாக அன்னாரின் மகனும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திரு.தயாளன் அவர்கள் தனது தந்தையின் பத்தாம் ஆண்டுத் திவசத்தை விசேட அன்னதான நிகழ்வுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் மேற்படி அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது.
இன்று மதியம், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களது 10 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு வவுனியா பாரதிபுரம் தமிழ் கலவன் பாடசாலை மாணவச் செல்லங்களுடன் இணைந்து இன்று அவரது நினைவாக விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வவுனியா பாரதிபுரம் தமிழ் கலவன் பாடசாலை மாணவச் செல்வங்களுடன் இணைந்து நடைபெற்றது. இப்பாடசாலையின் தலைமையாசிரியை திருமதி.சேகர் பிரியதர்ஷினி உப அதிபர் திருமதி.சிவரஞ்சன் சியாளினி ஆகியோரின் தலைமையில், ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கான முழுமையான ஒழுங்கமைப்பை மாணிக்கதாசன் நற்பணிமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரும், சமூக சேவையாளருமான திருமதி. நவரெட்ணம் பவளராணி அவர்கள் சிறப்பாக நடத்தி இருந்தார்.
மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையின் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிலரும், ஆசிரிய சமூகமும் கலந்து சிறப்பித்ததுடன், பத்தாம் ஆண்டு நினைவுதின நிகழ்வில் அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களுக்கு முதலில் ஒரு நிமிட மௌன வணக்க அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தேவார பாராயணம் பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து வயது முதிர்ந்த ஒருவருக்கு, அமரர் பெருமைனார் லிங்கநாதன் நினைவாக தானத்தட்டும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவ,மாணவிகள், ஆசிரிய சமூகத்தை சேர்ந்தோர், பெற்றோர், பொதுமக்களுக்கான விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.
மேற்படி அன்னதான நிகழ்வானது அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களின் மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகனான பிரான்சில் வசிக்கும் திரு.தயாளன் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது. மேற்படி தயாளன் கழகத்தின் பிரான்ஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மிகவிரைவில் அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் உட்பட பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் நிகழ்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.தயாளன் உட்பட அமரர் லிங்கநாதன் அவர்களின் குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட அப்பாடசாலை அதிபர், ஆசிரியைகளினால் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
08.07 2023.
நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos