கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல்!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வில் 12.07.2023 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு – கோப்பாய் ஆசிரிய கலாசாலை கடந்த நூற்றாண்டுகளில் சாதித்த விடயங்களை எவை? என்ற பொருளில் பேருரை ஆற்றினார். உரையாற்றிய அவரை கலாசாலை அதிபர் ச. லலீசன் பிரதி அதிபர் க. செந்தில்குமாரன் கலாசாலை முகாமைத்துவ சபை உறுப்பினர் சிவலோஜனி சுரேந்திரன் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.