நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகை!! (PHOTOS)
நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகையுடன் கூடிய வினியோகம் செலவின்றி நிறைவடைந்தது
தென்னை முக்கோண வலையம் ஒன்றை வடக்கில் (கிளிநொச்சி, யாழ்பாணம், முல்லைத்தீவு) ஆரம்பிப்பதற்கான முயற்சியை இனம் கண்டு (தென்னை பயிர்செய்கை சபை) அதனை மக்களுடன் இணைப்பு செய்து வலுவூட்டப்பட்ட மக்கள் தாமாக முன்வந்து அரச அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி இச் செயற்றிட்டத்தை நிறைவாக்கினர். இது முற்றிலுமாக “தென்னை பயிர்செய்கை சபையின் பங்களிப்பு ஒன்றாகும்” 7 வருடங்களில் சராசரியாக 25000-35000 மேற்பட்ட வருமான அதிகரிப்பை ஒரு குடும்பத்தின் இலக்காக கொண்டு தொடர் கண்காணிப்பு பொறிமுறை ஒன்றை மக்கள் பொருளதார மன்றம் மக்களது பங்களிப்புடன் வடிவமைக்க முயன்றுள்ளது.
நடு செயற்றிட்டம் பற்றி,
அருட்தந்தை Rtn. ஜோசுவா ஊடாக Rotary clube kilinichchi யில் அறிமுகமாகி 365 நாட்களில் 365 செயற்றிட்டம் நிறைவடைவதில் பாரிய நிலைபேறான பங்களிப்பினை (Sustainable development) வழங்கியிருந்தது இதனை அடியொற்றி மக்கள் பொருளாதார மன்றம் கிளிநொச்சி “நடு” செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தது.