;
Athirady Tamil News

தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமான குருந்தூர்மலையில் தாக்குதல்!

0

முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளதாவும், பௌத்த பிக்குகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் காலை வேளையிலே குருந்தூர் மலை பகுதியில் பொங்கல் நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த நிலையிலே தமிழ் தரப்புகள் பொங்கல் நிகழ்வுக்காக அங்கு சென்றிருந்தனர்.

இதற்கு முன்னதாக, குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையின் விகாராபதி கலகமுக சாந்தபோதி ஏற்கனவே முகநூல் வாயிலாக இன்றைய தினம் பொங்கல் நிகழ்வை திட்டமிட்ட வகையில் குழப்புவதற்காக மக்களை ஒன்று சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் அடங்கலான இரண்டு பேருந்துகளில் வந்தவர்கள் அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் மக்கள் தரப்பினாலும் காவல்துறையினராலும் அவர்களுக்கு எந்த விதமான இடையூறும் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர்களின் வழிபாடு நிறைவுபெற்று அவர்கள் செல்லும்போது அங்கே தமிழ் தரப்புக்கள் வருகை தந்து அந்தக் குருந்தூர் மலையிலே ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைக்கப்பட்ட இடத்திலே பொங்கல் பொங்க முற்பட்ட போது அங்கு வருகை தந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் அவர்களோடு காவல்துறையினர் இணைந்து தொல்பொருள் பிரதேசத்தில் நெருப்பு மூட்ட முடியாது என்ற காரணத்தை காட்டி இதிலே நெருப்பு மூட்ட விட மாட்டோம் என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொல்பொருள் திணைகள அதிகாரிகள் நிலத்தில் நெருப்பு மூட்ட முடியாது என்றும் இடத்திலே மூன்று கற்களை அடுக்கி அதன் மேல் தகரம் ஒன்றை வைத்து அதன் மேல் பொங்கல் பொங்க முடியும் என அனுமதி அளித்தனர்.

இருப்பினும் அங்கு வருகை தந்த கிளிநொச்சி – முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரியான சமுத்திர ஜீவா குறித்த விடயம் தொடர்பிலே அந்த சிங்கள மக்களோடு இணைந்து பொங்கல் நிகழ்வை குழப்புவதற்காக முன் நின்று செயற்பட்டு அங்கு பொங்கினால் சமாதான குலைவு ஏற்படும் என்ற கருத்தை கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது தமிழ் தரப்புக்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு நாங்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பொங்குவோம் எனக்கூறி கற்களை அடுக்கி விறகுகளை வைத்து நெருப்பு மூட்டிய போது அந்த இடத்தில் நின்ற காவல்துறை அதிகாரிகள் சப்பாத்து கால்களால் அந்த நெருப்பை அணைத்து பொங்கல் பொங்குவதை தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அந்த இடத்திலே அமர்ந்திருந்து நாங்கள் பொங்காமல் அந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என கூறி இருந்தனர்.

தொடர்ச்சியாக அங்கிருந்து சிவபுராணம் பாடிக் கொண்டிருந்த போது மீண்டும் அங்கு வந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டனர்.

அதேவேளை, பிரித்தோதும் நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு இருந்தனர் அவர்களை வெளியேற்றுமாறு காவல்துறையினருக்கு கூறிய போது அவர்களையும் வெளியேற்றி இவர்களையும் வெளியேற வேண்டுமென பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்ட முற்பட்டபோது முரண்பாடுகள் ஏற்பட்டன.

பின்னர் அந்த இடத்திலேயே குறிப்பிட்ட நேரம் பொங்கல் பொங்காது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் கூறியதையடுத்து அந்த இடத்தில் கற்பூரம் கொளுத்தாது மலர்கள் தூவி பாலால் அபிஷேகம் செய்து வழிபாடுகள் இடம் பெற்றன.

இது தொடர்பாக மக்கள் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

திட்டமிட்ட வகையிலே சிங்கள மக்களின் வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தங்களை நீதிமன்ற அனுமதி இருந்தும் அந்த இடத்தில் வழிபாடு செய்யவிடாது செயற்பட்ட காவல்துறையினர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வைத்திருந்தார்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.

அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி வேண்டினர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்தனர். தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தீமூட்ட தயாரான போது, முல்லைத்தீவு காவல்துறையினர் பொங்கலுக்கு தடையேற்படுத்தினர். சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்தனர்.

இதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் இணைப்பு

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றைய தினம் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெலி ஓயா சப்புமல் தன்ன விகாரை மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரரால் கடந்த 11 ஆம் திகதி செய்யப்பட்ட இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் “இந்தப் பொங்கல் நிகழ்வானது இனங்களுக்கு குழப்பங்களை விளைவிக்கும் என்றும் குறித்த பகுதியில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” கூறி தடை உத்தரவை கோரினர்.

இருப்பினும் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் செய்ய முயற்சிக்கவில்லை என எதிர் தரப்பால் கூறப்பட்ட நிலையில், வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் குருந்தூர் மலையில் தமிழ் மக்களால் பொங்கலுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மக்கள் அங்கே சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

அதே சமயம், தென் பகுதியில் இருந்து இரண்டு பேருந்துகளில் சிங்கள மக்களும் அங்கு வருகை தந்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கலகம் அடக்கும் காவல்துறையினரும் காவல்துறையினரும் இரண்டு பேருந்துகளில் குருந்தூர் மலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குருந்தூர் மலையில் இன்று (14) நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் இனவாத கலவரம் ஏற்படலாம் என்றும், “போராட்டத்திற்கும் அப்பால்” என்ற அமைப்பின் தலைவரான பலாங்கொடை கஸ்ஸப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (சி.ஐ.டி) கடிதமொன்றை அனுப்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி !!

குருந்தூர்மலை விவகார வழக்கு ஒத்திவைப்பு !!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதித்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்-அங்கஜன்!!

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்; ரவிகரன் மற்றும் மயூரன் கைது !!

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!!

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்!!

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர்மலையில், புத்தர் சிலை நிறுவுதல், விசேட வழிபாட்டு முயற்சி – மக்களின் ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தம்!! (படங்கள்)

குருந்தூர்மலைக்கு விரைந்தது கூட்டமைப்பு !!

குருந்தூர் மலை விவகாரம்; நீதிமன்றில் சுமந்திரன்!!

பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!!! (படங்கள்)

நீதிமன்ற கட்டளை வலுவற்றதா?:சிறிதரன் கேள்வி !!

முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி..!!

குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.