;
Athirady Tamil News

உலகளவில் 16 கோடி பேர் வறுமை நிலையில் – வெளியான காரணம் !!

0

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஸ்யா உக்ரைன் போரினால் 2020 முதல் தற்போது வரை 16 கோடி பேர் வறுமைக்குள்ளாக்கப்பட்டிருப்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் படி, 2020 மற்றும் 2023 இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும் வரையறுத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) எனும் அமைப்பின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் அந்நாடுகளின் கடனுக்கும், முறையற்ற சமூக செலவினங்கள் மற்றும் வறுமையின் அதிகரிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவ்வறிக்கை குறிப்பிடுவது யாதெனின், பொருளாதார ரீதியாக போராடும் நாடுகள் கடனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்தம் செய்து சமூக வளர்ச்சி செலவினங்களுக்கும், பொருளாதார அதிர்ச்சிகளின் விளைவுகளை எதிர்ப்பதற்கும் செலவிடும்படியாக வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அமைப்பு வெளியிட்ட மற்றொரு அறிக்கையின் படி கிட்டத்தட்ட மொத்த சனத்தொகையில் 330 கோடி பேர் கல்வி மற்றும் சுகாதாரத்தை விட கடனுக்கான வட்டிக்கு அதிகமாக செலவழிக்கும் நாடுகளில் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் 165 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வருடாந்திர செலவு 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்தம் செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.