கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்……………………..
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் நடத்திய நூற்றாண்டுவிழாக்கால ஆரம்பக்கல்வித்தின விழா 14.07.2023 காலை 9.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆரம்பக்கல்வித்துறைக்கான பணிப்பாளர் லோ ஸ்ரனி;லசும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களான விக்னேஸ்வரி கந்தசாமி ஐயர் , வரணியூர் துரை. இளங்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆரம்பக் கல்விமன்றக் காப்பாளர் சந்திரிகா தர்மரட்ணம் தொடக்கவுரையையும் கலாசாலையின் உப அதிபர் சத்தியா றஞ்சித் வாழ்த்துரையையும் ஆற்றினர். ஆரம்பக் கல்வித் தினத்தையொட்டி கலாசாலை ஆசிரிய மாணவரிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அபிநயப்பாடல், பொம்மலாட்டம், சிறுவர் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்வுகள் ஆசிரிய மாணவர்களால் மேடையேற்றப்பட்டன.
நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஞானசக்தி கணேசானந்தன், திலகநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை ஆரம்பக்கல்வி மன்றத் தலைவர் ரி. சதீஸ் ஆற்றினார். வரவேற்பு நடனத்தை விரிவுரையாளர் தர்சினி முத்துராஜா நெறிப்படுத்தினார். ஆங்கில அபிநயப்பாடலை விரிவுரையாளர் சுஜீவா அருள்லிங்கமும் சிங்கள அபிநயப்பாடலை விரிவுரையாளர் சசீவனியும் நெறிப்படுத்தினர். நிகழ்வின் நிறைவில் சீவகாருண்யம் என்ற சிறுவர் நாடகம் இடம்பெற்றது. இதனை ஆரம்பக்கல்வி மன்றக் காப்பாளர் சந்திரிகா தர்மரட்ணம் நெறிப்படுத்தினார்.