;
Athirady Tamil News

இஸ்ரேல் இராணுவத்தில் வான்வெளி தாக்குதல்களுக்காக செயற்கை நுண்ணறிவு !!

0

இன்று உலகளவில் செயற்க்கை நுண்ணறிவு எனும் தொழிநுட்பம் பேசுப்பொருளாகி உள்ளது.

காரணம், இன்று எல்லாவிதமான துறைகளிலும் இத்தொழிநுட்பத்தின் தேவை திணிக்கப்பட்டு உள்ளது.

வான்வெளி தாக்குதல்களின் போது இலக்குகளை தெரிவு செய்தல் மற்றும் போருக்கான தளவாடங்களை முறைப்படுத்தல் போன்ற பணிகளில் ஏஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.

ஃபயர் ஃபேக்டரி என்ற ஏஐ மாதிரியை இஸ்ரேல் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டை உறுதி செய்துள்ள இஸ்ரேல், அது எந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்கானது என்பதைத் தெரிவிக்கவில்லை.

இது வான்வழித் தாக்குதல் இலக்கை தேர்வு செய்து தருவதோடு, அந்தப் பகுதிக்கு எவ்வளவு வெடிப்பொருள் பயன்படுத்த வேண்டும், எந்த நேரத்தில் அவற்றைப் பிரயோகப்படுத்துவது என்பனவற்றை கணித்துத் தரும்.

இதுதொடர்பில் கர்ணல் உரி கூறுகையில்,

“மணிக் கணக்கில் செய்த பணிகளை இனி நிமிடங்களில் முடிந்துவிடும்.

அதனை ஒரு சில நிமிடங்கள் மனிதர்கள் மேற்பார்வை செய்தால் வேலை முடிந்தது.

ராணுவத்தில் இப்போது உள்ள ஆள் பலத்துடனேயே ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு நிறைய செய்துவிடலாம்” என்றார்.

ஆனால், ராணுவத்தில் ஏஐ பயன்பாடு குறித்து ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் டல் மிம்ரான்,

“ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது இலக்குகளை கணிப்பதில் ஏதேனும் ஒரு தவறு நடந்துவிட்டால் யார் பொறுப்பு?

ஏஐ தொழில்நுட்பத்தால் சரியாக பதிலளிக்க முடியாதபட்சத்தில் யார் மீது பழி சொல்ல முடியும்?

ஒரே ஒரு தவறு ஒரு குடும்பத்தையே காலி செய்துவிடாதா?” என்று வினவியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.