;
Athirady Tamil News

மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!!

0

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.