;
Athirady Tamil News

அணு ஆயுதங்களை பயன்படுத்துமா ரஸ்யா…!

0

அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் காலவதியாகி வருகின்ற நிலையில், இன்றளவிலும் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைவிட, அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சமன் செய்ய சீனாவும் ஒருப்புறம் முயற்சித்து வருகின்றது.

ரஷ்யாவிடம், போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிய பல சிறிய தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் உள்ளன.

இந்த தந்திரோபாய அணு ஆயுதங்களில் சில ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைப் போலவே சக்திவாய்ந்தவை.

பெலராஸ் நாட்டில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தி வருவதோடு, 500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில், ரஷ்யாவின் முன்னாள் அணுசக்தி பேரப் பேச்சாளரும், இப்போது வியன்னா நிராயுதபாணியாக்கம் மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான நிகோலாய் சோகோ தெரிவிக்கையில்,

“பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது உக்ரைனை விட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலின் போது அந்நாடு மேற்கொள்ளும் எதிர்த்தாக்குதல்கள் ரஷ்யாவில் ஒரு பினாமி போராக பார்க்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஷ்யாவின் தாக்குதலும் அங்கு உக்ரைனுக்கு எதிரானது அல்ல என்பது மட்டுமல்ல, அது நேட்டோவுக்கு எதிரான தாக்குதலாக அந்நாட்டில் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் எனக்கு வேறு கருத்து உள்ளது. அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

உக்ரைன் மீதான இத்தாக்குதலை அணு ஆயுதப் பயன்பாடு வரை ரஷ்யா எடுத்துச் செல்லும் ஆபத்து இருப்பதையும் நான் உணர்கிறேன்.

அணு ஆயுத மோதலின் ஆபத்து எழும் அளவுக்கு தாக்குதல்களை அதிகரிக்க ரஷ்யா விரும்புகிறது.

அதற்கு பயந்து நேட்டோ பின்வாங்குகிறது” என்றார்.

இந்நிலையில், இவ்வுலகம் எப்படி அத்தாக்குதலை எதிர்க்கொள்ள போகின்றது?

இது தொடர்பில் அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அணுஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக நம்பவில்லை என்றும், அப்படி தாக்குதல் இடம்பெற்றால் அதற்கு பதிலளிக்க கவனகுவிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், உக்ரைனின் ஜபோரிஷியா அணுமின் நிலையத்தை ரஷ்யா ஆக்கிரம்த்து வைத்துள்ளமைக்கு பின்னணி என்ன என்றும் உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருகிறது.

என்னவாக இருந்தாலும், அமெரிக்காவை பொருத்த வரையில், சிறிய ஆயுதம் என்றாலும் சரி, பெரிய அணுகுண்டு என்றாலும் சரி, அது அணு ஆயுதத் தாக்குதலாகவே கருதப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.