;
Athirady Tamil News

துபாயில் வீதிகளை பராமரிக்க ஏஐ உதவியுடன் லேசர் ஸ்கானிங்க் தொழிநுட்பம் !!

0

கார்களுடன் கேமராக்களை இணைத்து, அத்துடன் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி, வீதிகளின் மேற்பரப்பை ஸ்கேன் செய்து விரிசல்கள், குழிகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பிற குறைபாடுகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை துபாய் இப்போது செயல்படுத்த துவங்கியுள்ளது.

பேவ்மென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தை, ரோந்து வாகனங்களில் நிறுவப்பட்டு, வீதிகளின் நிலை குறித்த தகவல்களை சேகரிக்க நகரத்தின் நெடுஞ்சாலைகளை லேசர் ஸ்கேன் செய்து இந்த வாகனங்கள் சுற்றி வருகின்றன.

இந்த அமைப்பு உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் லேசர் ஸ்கேனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏஐ லேசர் ஸ்கேனர், அந்த வீதிகளின் பரப்புகளில் பதின்மூன்று வெவ்வேறு விதமான குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீதிகளில் 1 மிமீ அளவுக்கு சிறியதாக இருக்கும் விரிசல்களை கூட இந்த ஏஐ கணினி கண்டறியும்.

விரிசல்களின் அகலம், ஆழம் மற்றும் அது உருவாகி இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஏஐ அல்காரிதம்களைப் பயன்படுத்தி கணினி நிகழ்நேரத்தில் தரவை சேகரிக்கிறது.

இந்த அமைப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியாளர்களுக்கான விரிவான அறிக்கைகளை உருவாக்குகிறது, அவர்கள் கணினி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வீதிகளை பழுதுபார்க்க முடியும்.

இச்செயன்முறை, சிறிய விரிசல்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது பராமரிப்புச் செலவுகளை வெகுவாக குறைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.