உக்ரைனுக்கு தொடரடி – மீண்டும் களத்தில் இறங்கிய ரஷ்யா !!
உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது இரண்டாவது இரவாகவும் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதேவேளை, ரஷ்யா தமது நாட்டுடன் இணைத்த கிரைமியா பிராந்தியம் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் மிகப் பாரிய அளவான வான் தாக்குதல்களை உக்ரைன் வான் பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் தடுத்துள்ளதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் மிகவும் பலமிக்கதாகவும் பாரிய அளவானதாகவும் இருந்ததாக ஒடேசா இராணுவ நிர்வாகத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயமடைந்தோர் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்களை தொடர்ந்து தொடர்மாடிக் கட்டடமொன்றின் பல்வேறு யன்னல்கள் உடைந்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.