;
Athirady Tamil News

வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை – சந்திரகாந்தன்!!

0

அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த சித்தாந்தக் காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர, நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை வரையறுத்தவர்கள் இவர்களது மூதாதையர்கள் போல் பேசுகின்றனர்.

தங்களது இருப்புக்காகவும், கட்சிக்காகவும், மட்டுமே பேசினார்களே தவிர எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உண்மையாக நேசிக்கும் மக்கள் நலன் சார்ந்த அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ளாது திட்டமிடப்படாத செயற்பாடுகளே இவர்களின் நடவடிக்கையாகும்.

கிழக்கு மாகாண மக்களின் சவால்களை எதிர்கொள்ள படித்த சமூகத்தின் செயற்பாடு எவ்வளவு முக்கியம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் சிந்தனைகளை பாரம்பரிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இந்த மண்ணிலே உற்பத்தி துறையை கட்டி எழுப்ப வேண்டியதே முக முக்கியமான வேலையாகும்.

உற்பத்தி செய்யக்கூடிய ஏற்றுமதி பயிர்களையே நாம் பயிரிட வேண்டிய தேவை உள்ளது பெரிய அளவு பொருளாதாரத்தை சிந்தித்து சிறிய அளவு பொருளாதாரத்தை நாம் இழந்து வருவது உண்மையாகும்.

அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த பிழையான வழிப்படுத்தலை தான் நாம் பிழை என சொல்கிறோமே தவிர இறுமாப்புடன் கூடிய சித்தாந்த பிழை என சொல்வார்கள் இந்த சித்தாந்தக்காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.