உயர்தர மாணவர்களின் வரவு குறித்து விசேட தகவல் !!
உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரமே இந்தத் தீர்மானம் பொருந்தும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடசாலை வரவு 80 வீதமாக இருக்க வேண்டுமென முன்னதாக அறிவித்த போதிலும் அது தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இவ்வருடத்திற்கான வரவு வீதத்தை 40 % ஆகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.