பாஸ்வேர்டை பகிர முடியாது: நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!!
பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.