தக்காளி சாப்பிடுவதை நிறுத்துங்கள்.. விலை தானாக குறையும்- உ.பி அமைச்சர்!!
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:- தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும். அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.