அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் – ஸ்ரீதரன்!! (PHOTOS)
அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் மாணவர்களின் கல்வியிலே ஐந்தாம் தர புலமைப் பரிசில், பதினோராம் தரம் ஆகியவை பொருத்தமற்ற கல்வி முறை எனவும் இன்னமும் சரியான கல்விக் கொள்கைக்குள் அரசாங்கம் வரவில்லை என்றும் இதனை திருத்தி அமைப்பதன் மூலமே சிறந்த எதிர்காலமுள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
கல்லூரி முதல்வர் தலைமையில் இடம் பெற்ற பரிசில் வழங்கும் நிகழ்விலே வலய கல்விப் பணிப்பாளர் அயல் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.