;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு!! (PHOTOS)

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை(28) இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் நடமாட்டம் அங்காங்கே காணப்பட்டாலும் வழமையான நிலையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

வடக்கில் பூரண ஹர்த்தால் !!

தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு!!

வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால்!!

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.