புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!! (PHOTOS)
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் சென்றிருந்தார்.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தினையே அமைச்சர் விதுர விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.