;
Athirady Tamil News

லேடி ரிஜ்வே விவகாரம்:விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்!!

0

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருபக்க சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெற்ற சிகிச்சையையடுத்து சத்திரசிகிச்சை மேற்கொண்ட போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சம்பவம் குறித்து நடந்த விடயங்களை முழுமையாக ஆராயமால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவதரப்பினரும் முடிவிற்கு வருவது தவறு என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில்விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதனால் மரணத்திற்கான காரணம் என்னவென்பதை அறிவதற்காக முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தவர்கள் மருத்துவர்களின் கவனமின்மையே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்படாத சிறுநீரகமே அகற்றப்பட்டது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.