சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!
கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கக்கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு கர்நாடாக மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, சிபிஐ தாக்கல் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல. ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவாக முடித்து வைக்க வேண்டுகோள் விடுக்க சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கூறினர். கடந்த 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
2020-ம் ஆண்டு சிவகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. இரண்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. 2017-ம் ஆண்டு சிவக்குமாருக்கு சொந்தமான இடத்தில் வருமானவரித்துறை சோதனையிட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டது. கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அனுமதி கொடுக்க, அக்டோபர 3-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிவக்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.