இந்தியாவின் தடையால் கனடாவில் ஏற்படவுள்ள மாற்றம் !!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அரிசி ஏற்றுமதிக்கான தடையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இதனால் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் அரிசி வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளும் பாரியளவில் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உணவுகள் தயாரிப்பதற்கான அரசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இந்த விலை அதிப்பிற்கு காரணமென கூறப்படுகிறது.
இதேவேளை, கனடா வாழ் இந்தியர்கள் பதற்றமடைந்து அதிகளவு அரிசி வகைகளை வீடுகளில் களஞ்சியப்படுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.