யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி கடையொன்றில் தீ விபத்து!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில், கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.