;
Athirady Tamil News

இந்தியா ஏறுமுகம்; சீனா, அமெரிக்கா இறங்குமுகம்: மார்கன் ஸ்டான்லி மதிப்பீட்டில் இந்திய பொருளாதாரம்!!

0

அமெரிக்காவின் நியூயார்க் மாநில மன்ஹாட்டன் பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு பொருளாதார சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. பொருளாதார சேவை நிறுவனங்களில் இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பல அளவுகோல்களை கொண்டு கணக்கிட்டு ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது. ரேட்டிங்ஸ் எனப்படும் இந்த தரப்பட்டியலில் உயர்வான இடங்களை அடைவது பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிறுவனம், தற்போது தரப்பட்டியலில் இந்தியாவை ‘மதிப்பீடு குறியீட்டிற்கு மேல்’ எனும் நிலைக்கு புதுப்பித்துள்ளது. இந்திய பொருளாதாரம் ஒரு நீண்ட ஏற்றத்தின் தொடக்கத்தில் இருப்பதாகவும், அதே சமயம் சீனாவில் பல வருடங்களாக நீடித்த பொருளாதார ஏற்ற நிலை, ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது. இந்தியாவில் சீர்திருத்த மற்றும் ஸ்திரத்தன்மைக்கான திட்டங்கள், வரப்போகும் காலங்களில் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தை தரக்கூடிய கண்ணோட்டத்தில் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

மதிப்பீடு குறியீட்டிற்கு கீழ் இருந்த இந்தியாவை, மதிப்பீட்டிற்கு சமம் எனும் நிலைக்கு அந்நிறுவனம் உயர்த்திய 4 மாதங்களுக்கு பிறகு இந்த தர உயர்வு தரப்பட்டிருக்கிறது. ஃபிட்ச் எனும் நிறுவனம் நேற்று தந்த தர பட்டியலில் பொருளாதாரத்தில், அமெரிக்கா தனது கடன்தகுதிக்கான மதிப்பீட்டில், “ஏஏஏ” (AAA) எனும் நிலையில் இருந்து, “ஏஏ+” என கீழிறங்கியிருக்கிறது. அதே போல் சீனாவின் பொருளாதாரமும் இறங்குமுகத்தில் இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இந்த இரு நாடுகளின் தர மதிப்பீடு குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதை இந்த புது மதிப்பீடு குறிக்கிறது. மார்கன் ஸ்டான்லியின் இந்த மதிப்பீட்டிற்கு அடிப்படையாக இந்தியாவின் மதசார்பற்ற தலைமையும், இந்தியாவின் ஆற்றல் மிக்க இளம் வயதினரும் கணக்கில் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.