நான் குற்றமற்றவன்: நீதிமன்றத்தில் டிரம்ப் வாதம்!!
2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) விசாரணைக்காக ஆஜரானார். அப்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப், ”நான் குற்றமற்றவன். தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தன் வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கின் சாட்சியாகள் எவருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்க, டிரம்ப் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.