சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
#################################
யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் இருபத்தாறாவது பிறந்தநாள் விழாவினை கடந்த இருபதாம் திகதி தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகள், தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த சில வருடங்களாக உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் செல்வன்.ஈழதர்சனின் தனது இருபத்தாறாவது பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் கேக் வெட்டி தாயக உறவுகளினால் குறிப்பாக பாடசாலை மாணவ மாணவிகளினால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 125 மாணவ, மாணவிகளுக்கு “பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி” வழங்கி வைக்குமாறு இப்பாடசாலையின் அதிபர் திரு.வா.பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டதை பிறந்தநாள் காணும் திரு.ஈழதர்சனிடம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவித்ததும், எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக அதுக்கு சம்மதம் தெரிவித்தார். இவரது தந்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர்.லெனின் எனும் திரு.செல்வபாலன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தந்தையைப் போன்றே சமூகத் தொண்டில் என்றும் முன்னின்று தனயனும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் சிலர், இப்பாடசாலையின் ஆசிரிய, ஆசிரியைகள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் உட்பட சிற்றுண்டி, யூஸ் என்பன வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 125 மாணவ, மாணவிகளுக்கு “பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி” அடங்கிய ஆரம்ப பொருட்கள் அடங்கியவை வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
இதன் வேலைப்பாடுகள் முடிவுற்றதும், கடந்தவாரம் & இன்றும் பாடசாலை சமூகத்தால் திரு.ஈழதர்சனின் முழுமையான நிதிப் பங்களிப்பில் உத்தியோகபூர்வமாக வழங்கும் இரண்டாவது நிகழ்வும் நடத்தப்பட்டது. அதாவது தற்போது வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 125 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாது எதிர்காலத்தில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்கும் “பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி” இலவசமாக வழங்கும் நடவடிக்கையை பாடசாலை அதிபர் மேற்கொண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி “பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி”யைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரிய சமூகமும் மிகவும் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் அதனைக் காட்டி பெருமிதம் அடைந்ததுடன் சுவிஸ் ஈழதர்சனுக்கு தமது நன்றியினையையும் தெரிவித்துக் கொண்டது.
இதேவேளை திரு.ஈழதர்சன் அவர்களின் இருபத்தாறாவது பிறந்தநாள் நிகழ்வும், “பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி” வழங்கும் நிகழ்வும் இப்பாடசாலையின் அதிபர் திரு.வா.பாலச்சந்திரன் தலைமையில், பிரதிஅதிபர் திரு.ஏ.சிவானந்தம், ஆசிரியர் திரு.சு.சுவேந்திரன், ஆசிரியர் திரு.தொ.நிராஜ், ஆசிரியை திருமதி.பி.பகிரதி, ஆசிரியை திருமதி.சி.இதயராணி, ஆசிரியை திருமதி.பா.சிவராசா, ஆசிரியை திருமதி.த.பிறேமாவதி, ஆசிரியை திருமதி.வ.சிறிவித்தியா, ஆசிரியை திருமதி.ரா.சியானி, ஆசிரியை திருமதி உ.லோகேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், அருட்சகோதரி பவளராணி, திரு.சின்ராசு உதயகுமார் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ள மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரும், சமூக சேவையாளருமாகிய திருமதி.பவளராணி நவரத்தினம் அவர்களின் ஒழுங்கமைப்பில் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதேவேளை தங்களது சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனின் இருபத்தாறாவது அகவை நாளில் சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்த நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு ஏற்கனவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமது இனிதான பிறந்தநாளினைக் கொண்டாடிய சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனை அவரது பெற்றோர், அவரது மனைவி, அவரின் தம்பி யாழீஷன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவதோடு” அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும் பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
தலைமையகம்,
வவுனியா, இலங்கை.
04.08.2023
சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு.. (வீடியோ)
சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ)
சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos