புங்குடுதீவு ஐக்கியம் அணி வெற்றி!! (படங்கள்)
நயினாதீவு அண்ணா விளையாட்டு கழகத்தினால் தீவக ரீதியாக நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட ( Netball ) தொடரில் எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன. நயினாதீவு இஸ்லாம் , நயினாதீவு அண்ணா B மற்றும் புங்குடுதீவு சண்ஸ்ரார் ஆகிய அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நயினாதீவு அண்ணா A அணியை சந்தித்த புங்குடுதீவு ஐக்கியம் ( Pungudutheevu United ) 18 – 12 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று நயினை அண்ணா 2023 வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டதோடு ரூபாய் 15000 பணப்பரிசிலையும் தட்டிச்சென்றது. இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக புங்குடுதீவு ஐக்கியம் அணியின் யதுர்சனா தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் சிறந்த வீராங்கனையாக புங்குடுதீவு ஐக்கியம் அணியின் மேரி தியூசா தெரிவாகியிருந்தார்.
இப்போட்டித்தொடரினை சிறப்பாக ஏற்பாடு செய்த நயினாதீவு மக்களுக்கு நன்றிகளை புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர். தீவக ரீதியிலான போட்டித்தொடரில் புங்குடுதீவு ஐக்கியம் அணி கலந்துகொண்ட முதல் வலைப்பந்தாட்ட தொடர் இதுவாகும்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.