கல்வியமைச்சின் விசேட தீர்மானம் !!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றிய மாணவர்களின் நலன்கருதி அடுத்த வருடத்திலிருந்து, தொழிற்பயிற்சி, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆறு மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் முதற்கட்டமாக 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.