சூயஸ் கால்வாயில் நடந்த விபத்து – டேங்கர் மோதி மூழ்கிய இழுவை படகு !!
சூயஸ் கால்வாயில் இழுவைப்படகு ஒன்று ஹொங்ஹொங் டேங்கர் கப்பல் மீது மோதி நீரில் மூழ்கியது.
ஹொங்ஹொங் கொடி ஏற்றப்பட்ட எல்.பி.ஜி டேங்கர் கப்பல் மீது இழுவைப்படகு மோதியதில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இழுவை படகில் இருந்த ஏழு பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் படகை மீட்க அதன் குழுக்கள் பணியாற்றி வருவதாக சூயஸ் கால்வாய் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், சனிக்கிழமையன்று மோதிய டேங்கர், ஹாங்காங் கொடியுடன் கூடிய சீனாகாஸ் லெஜண்ட் கப்பல் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து கால்வாயை கடக்கும் மற்ற கப்பல்களின் இயக்கத்தை பாதித்ததா என்பது குறிப்பிடப்படவில்லை.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக பல சரக்குக் கப்பல்கள் கடந்து செல்வதற்கு இழுவை படகுகள் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.