பிரித்தானியாவில் புதியவகை கொரோனா!!
பிரித்தானியாவில் பரவும் புதியவகை கொவிட் வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட் வைரஸ் பரவுகின்றது. ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதியவகை வைரஸ் பிரித்தானியாவில் பரவுவது முதன்முதலாக 31ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை பாதிக்கப்பட்ட பத்துபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிய வைரஸ் குறித்தும் அது பரவும் விதம் குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொவிட் 19 குறித்த ஒருங்கிணைப்பாளர், வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இது குறித்து அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் வைரஸ் பரவுவதை எச்சரிக்கையுடன் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.