தென்சீன கடலில் சீன இராணுவத்தின் அத்துமீறலுக்கு பிலிப்பைன்ஸ் கண்டனம் !!
தென் சீன கடற்பரப்பில் பிலிப்பைன்சின் படகை சீன இராணுவ கப்பல் மூலமாக கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உலகின் பரபரப்பான கடல் பாதைகளின் ஒன்றான தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படும்.
சர்ச்சைக்குரிய இக்கடற்பரப்பில், தாமஸ் ஷோல் தீவு பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்தீவிற்கு உணவு மற்றும் நீர் வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சீன தூதர் ஹுவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.