;
Athirady Tamil News

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் – கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆராய்ச்சி இணைப்பாளர் , இலங்கையின் புதிய கூட்டு திட்ட இணைப்பாளர் கலாநிதி அரெய்ன் டி சாக்சே , கலாநிதி நிமல்பெரேரா , இலங்கை தொல்பொருள் திணைக்கள முன்னாள் உதவிப்பணிப்பாளர் , யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் , மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாத கால பகுதியாக கந்தரோடை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது , கி.பி. 1ஆம் – கி.பி. 3ஆம் நூற்றாண்டு கால பகுதிக்கு இடைப்பட்டதாக கருதப்படும் லக்சுமி நாணயங்கள் 05 மீட்கப்பட்டுள்ளன.

1917ஆம் ஆண்டளவில் கந்தரோடை பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட “போல் பீரிஸ்” நாணயங்கள் சிலவற்றை கண்டு பிடித்த போது , அவற்றில் பெண்ணொருவர் தாமரை மலர் மீது நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டதை ஆதாரமாக காட்டி , அவருக்கு லக்சுமி நாணயம் என பெயர் வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.