மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)
மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை மையமாக கொண்ட பிரதேசமாகும். இயற்கையாகவே இவ் மாவட்டத்தின் அமைவும் காலநிலைகளும் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பினை நல்கும் விதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசியாவின் மிக பாரிய கண்டல்நிலம் மன்னார் விடத்தல் தீவு என்னும் பிரதேசத்தில் காணப்படுகின்றது.
மத்திய ஆசியாவின் பறவைகளுக்கான மையமாகவும் காணப்படுகின்றது. மன்னார் வளைகுடாவில் மிக விரிவான திட்டுகள் மற்றும் கடல் கடல் புல் படுக்கைகள் உள்ளன. மன்னார் வளைகுடாவின் தென்பகுதியில் உள்ள பாறைகளான கந்தகுளிய மற்றும் தலவில போன்றவை நாராவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மன்னார் வளைகுடா பகுதியில் மோதல் சூழ்நிலை காரணமாக பாறைகள் ஆய்வு செய்யப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது. பறவைகள் பார்வையாளர்கள், பறவைகளுக்காக இலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் விரும்பிவருகின்றமையும் முக்கியமானது.
இது இவ்வாறு இருக்க மன்னாரில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி காணாமல்ஆக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன. 2006 ஆண்டும் அதற்கு பின்னரான பல தடவைகள் வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி எஸ் டபிள்யூ கொட்டகம அவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஊடாகவும் அனுகியிருந்தமையும் குறித்த அச்சங்குளம் சதுப்பு நிலங்களினையும் ஆய்வுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது ஆய்வு நடவடிக்கைக்கும் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் விழிப்பூட்டலுக்கும் இப் பிரதேசத்தினை பயன்படுத்தியுள்ளார். பயன்படுத்தியுள்ளமையும் முக்கியமானதொன்றாகும். அவரது மாணவர்களும் தொடர்சியாக மாவட்டத்தின் பறவைகள் சரணாலயம் சதுப்புநில சுற்றாடல் தொடர்பாக ஒவ்வொருவருடமும் களஆய்வினை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சினால் அச்சங்குளம் சதுர்புநிலம் சுற்றுலா பகுதியாக ஆவணப்படுத்தப்பட்டது.
இவ்வாறான முக்கியமான சுற்றுலாப்பிரதேசம் இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா? என்ற ஜயங்களுக்கு மத்தியில் இவ் அச்சங்குளத்தினை மீட்பதற்கு நாம் போராடவேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளோமா? என சிந்திக்க வேண்டியுள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் சூழல் முன்னோடிகள் தெருவிக்கின்றனர்.
மாவட்டத்தின் உயர் மட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக மக்களையும் மாவட்டத்தின் வளங்களையும் முறையற்றவிதத்தில் கையாள்கின்றனரா என்ற கேள்விகள் மக்கள் மனதில் தோன்றியுள்ளதுடன் மன்னாரின் வளங்கள் துஸ்பிரயோகமாக்கப்படுவதனையும் காணாமல் ஆக்கப்படுவதற்கும் அரச உயர் அதிகாரிகள் பொறுப்புக்கூறுவார்களா? யாருக்காக காணாமல் ஆக்கப்படுகின்றன சந்தேகங்களும் சூழல் முன்னோடிகளுக்கு ஏற்பட்டுள்ளதுடன் தொடர்புபட்ட அரச உயர் அதிகாரிகளுக்கு கண்டனங்களையும், உடனடியாக இயற்கைவளங்களை பேணுவதற்கும் பறவைகள் சரணாலயம் மற்றும் சதுப்பு நிலங்கள் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெருவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)